Enable Javscript for better performance
எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு புதன்கிழமை சிதம்பரம் வண்டிகேட் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, கடலூர் மேற்கு மாவட்டச் செயலரும், எம்.பி.யுமான ஏ.அருண்மொழிதேவன் தலைமையில் அதிகமுகவினர் அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக கீழ ரத வீதியிலுள்ள அதிமுக அலுவலகத்திலிருந்து ஏ.அருண்மொழிதேவன் எம்.பி. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று வண்டிகேட் பகுதியை அடைந்தனர்.

    நிகழ்ச்சியில் சிதம்பரம் எம்.பி. மா.சந்திரகாசி, செல்வி.ராமஜெயம் எம்எல்ஏ, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, தொகுதி செயலர் பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலர் ரா.செந்தில்குமார், நகர பேரவை செயலர் டேங்க் ஆர்.சண்முகம், மணிவேல், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர், கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஏ.பாண்டியன் (குமராட்சி), கே.அசோகன் (பரங்கிப்பேட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கடலூர்: மஞ்சகுப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு நகர அதிமுக செயலர் ஆர்.குமரன் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச்செயலர் முருகுமணி, மருத்துவ அணிச்செயலர் சீனிவாசராஜா, தொழில்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய அணிச்செயலர் காசிநாதன், நகர்மன்ற துணைத்தலைவர் ஜே.குமார், திட்டக்குழு உறுப்பினர் கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திட்டக்குடி: இதேபோல் திட்டக்குடி நகரம் மற்றும் மங்களூர் ஒன்றிய அதிமுக சார்பில் திட்டக்குடியில் நகர செயலர் நீதிமன்னன் தலைமையில், மங்களூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கந்தசாமி முன்னிலையில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

    பின்னர், அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் போத்திரமங்களம், பனையாந்தூர், பண்ருட்டி, காடாம்புலியூர், திருவத்தூர் ஆகிய ஊர்களிலும் எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai