சுடச்சுட

    

    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஓய்வூதியர் தினம் கடலூர் என்.ஜி.ஓ. சங்க கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் கோ.கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலர் ந.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலர் வின்சென்ட் டி பால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து

    பேசினார்.

    கூட்டத்தில், துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்புச் செயலர் முனுசாமி, பிரசாரச் செயலர் கண்ணன், சட்ட ஆலோசகர் கரு.ராயப்பா, ஜே.பி.லூர்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai