சுடச்சுட

  

  கையெழுத்திட வந்தவர்கள் மீது தடியடி: பெண் எஸ்.ஐ. பணியிட மாற்றம்

  By பண்ருட்டி  |   Published on : 25th December 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வழக்கு தொடர்பாக பண்ருட்டி காவல் நிலையத்துக்கு கையெழுத்திடுவதற்காக வந்தவர்கள் மீது பெண் துணை ஆய்வாளர் தடியடி நடத்தினார். இதையடுத்து அவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

  பண்ருட்டி காவல் நிலையத்தில் பெண் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த வர் அமலா. இவர் புதன்கிழமை பணியில் இருந்தபோது, 14.11.2014-ல் நடந்த தகராறு வழக்கு சம்பந்தமாக, சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த 7 பேர் பண்ருட்டி காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வந்தனர்.

  இவர்கள் காவல் நிலைய வளாகத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த துணை ஆய்வாளர் அமலா அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த 3 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றனர். பலத்த காயம் அடைந்த மணிகண்டன், பிரேம்குமார், மாணிக்கவேல் உள்ளிட்ட 4 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவர்கள் மீது துணை ஆய்வாளர் அமலா தடியடி நடத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், பண்ருட்டி டி.எஸ்.பி. கிருஷ்ணசாமியிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கடலூர் எஸ்.பி. அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு அமலா பணி மாறுதல் செய்யப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai