சுடச்சுட

  

  கோ-ஆப்டெக்ஸ் துணிகளை இணையதளத்தில் தேர்வு செய்யலாம்

  By கடலூர்,  |   Published on : 25th December 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோ-ஆப்டெக்ஸ் துணிகளை வலைத்தளத்தில் பார்வையிட்டு, தேர்வு செய்துகொள்ளும் முறை நடைமுறையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு விற்பனைக்காக மகளிருக்கு ஜெயகார்த்திகா சேலைகளும், ஆண்களுக்கு 100 சதவீதம் பட்டு மற்றும் பருத்திச் சட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தங்க மழைத் திட்டத்தின் கீழ், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கைத்தறி துணிகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்டோருக்கு, தங்கக் காசுகள் பரிசளிக்கப்பட்டன.

  தற்போது முதல் பரிசாக 4 கிராம் தங்கம் 10 நபர்களுக்கும், 2 கிராம் தங்கம் 30 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸில் ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 என்ற மதிப்பில் பரிசுக்கூப்பன்களும் வழங்கப்படுகின்றன. இதனை உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசாக வழங்கி கைத்தறி துணிகள் வாங்குவதை ஊக்கப்படுத்தலாம்.

  வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சமாக்கும் விதமாக, மின் வணிக (இ-சேல்ஸ்) முறையை கோ-ஆப்டெக்ஸ் புகுத்தியுள்ளது. இதன் மூலமாக ஜ்ஜ்ஜ்.ஸ்ரீர்ர்ல்ற்ங்ஷ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்துக்குச் சென்று பார்வையிட்டு, துணிகளை தேர்வு செய்யலாம். அதற்கான தொகையை செலுத்தி வீட்டுக்கே துணிகளை வரவழைத்து பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மின் வணிகத்தில் முதல்கட்டமாக பட்டுச் சேலைகள், பருத்தி சேலைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  எனவே கடலூர் மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai