சுடச்சுட

    

    சிதம்பரம் தேரோடும் வீதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில், மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவ தேர்த்திருவிழா மற்றும் ஆருத்ரா தரிசனம் வருகிற ஜனவரி 4,5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    முன்னதாக ரூ.1.25 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள நடராஜர் சுவாமிக்கான புதிய தேர் வெள்ளோட்டம் டிசம்பர் 25-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு நகராட்சி சார்பில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தலைமையில், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிதம்பரம் நான்கு வீதிகள் மற்றும் நான்கு சன்னதி தெருக்களில் சாலையோரம் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், தேரோடும் வீதிகளில் உள்ள

    தார்ச்சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai