சுடச்சுட

    

    "சிறப்புக் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்

    By 'கடலூர்  |   Published on : 25th December 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறப்புக்குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டுமென என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் கூறினார்.

    பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் பல்வேறு வகையான குறைபாடுகளைக் கொண்ட சிறப்புக் குழந்தைகள் மேம்பாட்டுக்காக "சிநேகா' என்ற பள்ளியை நடத்தி வருகிறது. இதில் 81 குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி பெற்ற ஆசிரியைகள், கைத்தொழில் கற்றுத் தருபவர்கள், மனநல மருத்துவர்கள், சிறப்பு நிபுணர்கள் பல்வேறு பயிற்சியளித்து வருகின்றனர். இப்பள்ளியில் சிறப்புக் குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவில், என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேசியதாவது: சிறப்புக் குழந்தைகளை சரியான முறையில் பாதுகாத்து தகுந்த மறுவாழ்வு வழங்குவதன் மூலம் அதிகாரமயப்படுத்தி, அவர்களை மற்றவர்களைப் போன்று சாதாரண வாழ்க்கை நடத்த வைக்கலாம். இப்பள்ளியில் பயின்ற பலர் யாரையும் நம்பியிராமல் வாழ்க்கை நடத்தும் அளவுக்கு பொருளாதார ரீதியில் பலம் பெற்றுள்ளனர். இது இப்பள்ளிக்கான மிகப் பெரிய பரிசு என்றார்.

    சிநேகா வாய்ப்புச்சேவைகள் அமைப்பு தலைவி ஸ்வர்ணகுமாரி சுரேந்திரமோகன் பேசுகையில், இக்குழந்தைகள் நலனுக்காக எவ்வித நிபந்தனையுமின்றி என்.எல்.சி. நிறுவனம் நிதியுதவி வழங்குவதற்கு பாராட்டுத் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், என்.எல்.சி. இயக்குநர்கள் சரத்குமார் ஆச்சார்யா, ராக்கேஷ் குமார், எஸ்.ராஜகோபால், எஸ்.பூபதி, சுபீர்தாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai