சுடச்சுட

    

    தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் வரவு ரூ.7.5 லட்சம்

    By சிதம்பரம்,  |   Published on : 25th December 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 765 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    மேலும், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய 72 கிராம் தங்கம், 160 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது.

    இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார் மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai