சுடச்சுட

    

    கடலூர் வட்டாரத்தில் நெல் அறுவடை பரிசோதனை திடல் ஆய்வு வேளாண் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

    வேளாண்மையில் அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பரிசுகள் வழங்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் நெல் உள்ளிட்ட உணவு பயிர்களின் விளைச்சல், சாகுபடி குறித்த கணக்கெடுப்பிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி கடலூர் வட்டாரத்தில் வெள்ளக்கரை மற்றும் களையூரில் அமைக்கப்பட்ட நெல் அறுவடை பரிசோதனை திடலை, வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) க.இளங்கோ ஆய்வு செய்தார். முன்னதாக மஞ்சக்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின்போது கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார், வேளாண்மை அலுவலர் சின்னக்கண்ணு, உதவி அலுவலர் தமிழ்செல்வன், சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai