சுடச்சுட

    

    பி.எஸ்.என்.எல். தொலைபேசி கட்டணத்தை டி.எம்.பி. வங்கியில் செலுத்தலாம்

    By கடலூர்,  |   Published on : 25th December 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள், தொலைபேசி மற்றும் மொபைல் போன் கட்டணங்களை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் (டி.எம்.பி.) செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். தொலைபேசியின் முதுநிலை பொதுமேலாளர் லீலாசங்கரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல். மற்றும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் கிளைகளில், பி.எஸ்.என்.எல். தொலைபேசி மற்றும் மொபைல் போன் கட்டணங்களை கடைசி நாள்களுக்கு முன் கூடுதல் கட்டணமின்றி, சந்தாதாரர்கள் செலுத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai