சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் பெரியார் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

  பெரியாரின் 41-வது நினைவு நாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது சிலைக்கு தி.க. பொதுச்செயலர் துரை.சந்திரசேகரன் தலைமையில் இயக்கத்தினர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தனர்.

  நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார், செயலர் நா.தாமோதரன், அமைப்பாளர் சி.மணிவேல், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.செயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று அதிமுக, திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மனித உரிமைகள் அமைப்பினர் மாலை அணிவித்தனர்.

  வடலூர் சரஸ்வதி நகரில் ஒன்றிய தி.க. செயலர் இரா.குணசேகரன் தலைமையிலும், ஜோதிநகரில் நிர்வாகி கலைச்செல்வி தலைமையிலும், பெரியார் உருவச்சிலைக்கு மண்டல மகளிரணி செயலர் ரமாபிரபாஜோசப் மாலை அணிவித்தார்.

  சிதம்பரம்: மேலரதவீதியிலுள்ள பெரியார் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

  கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மாவட்டச் செயலர் வ.க.செல்லப்பன் தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

  மதிமுக: இதேபோல் கடலூர் மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள் தலைமையில், மதிமுக நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

  விருத்தாசலம்: நீதிமன்ற வளாகம், அரசு கலைக் கல்லூரி, ஜங்ஷன் சாலை அருகிலுள்ள பெரியார் சிலைகளுக்கு தி.க. செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  திமுக: நீதிமன்ற வளாகம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு திமுக மேற்கு மாவட்டச் செயலர் வெ.கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai