Enable Javscript for better performance
மாணவர்களுக்கு நீதி நூல் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு நீதி நூல் வழங்கும் விழா

    By சிதம்பரம்,  |   Published on : 25th December 2014 03:48 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா தொடக்கப் பள்ளியில் தில்லைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு நீதி நூல்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவில் தில்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ரத்தின.திருநாவுக்கரசு மாணவர்களுக்கு நூல்களை வழங்கினார். ஆடிட்டர் பா.நடராஜன், பொருளாளர் சி.பரந்தாமன், உறுப்பினர் புவனகிரி மா.ஆறுமுகம் ஆகியோர் மாணவர்களுக்கு நீதி நூல்கள் குறித்து உரையாற்றினர். விழாவில் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் கி.பாலசுப்பிரமணியன், துணைச் செயலர் ரா.ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் நா.ராம்குமார், எழுத்தாளர் சு.மோகன், த.கமல்சந்த், ந.ரவிசங்கர், பா.விஸ்வநாதன், முருக.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai