Enable Javscript for better performance
ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By விருத்தாசலம்,  |   Published on : 25th December 2014 03:50 AM  |   அ+அ அ-   |    |  

    ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து, விருத்தாசலத்தில் ரயில்வே ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம் ரயில் நிலையத்தில், தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு, தென்னக மஸ்தூர் யூனியன் சங்க உள்கோட்ட செயலர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். தென்னக ரயில்வே மத்திய சங்கச் செயல் தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மஸ்தூர் யூனியன் சங்க கிளைச் செயலர் சிவா, கிளைத் தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகானந்தம், சசிகுமார், ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai