சுடச்சுட

    

    விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் கிராமத்தில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

    முகாசபரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யாகோப்(35). பெயிண்டர். விருத்தாசலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில், தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, எருமனூர் வி.இ.டி. பள்ளி அருகில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில், யாகோப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் விரைந்து சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai