சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் இறையூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2013-14ஆம் ஆண்டு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புக்கான பாக்கித்தொகை ரூ.15 கோடியை வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    2014-15ஆம் ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கரும்பு விவசாயிகள், ஆலை நிர்வாகம், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். கரும்புக்கான வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்கச் செய்யக் கோரியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர்.

    அதன்படி, பெண்ணாடம் அடுத்துள்ள இறையூரில் உள்ள தனியார் சக்கரை ஆலை முன் 3 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் வியாழக்கிழமை தொடங்கினர்.

    போராட்டத்துக்கு சங்க கெüரவத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலர் செல்வராஜ், தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கோவிந்தராஜ், கெüரவத் தலைவர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் கலியமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai