சுடச்சுட

  

  சிதம்பரம் காமராஜ் பள்ளிக்கு சுவாமி விவேகானந்தர் விருதை நாமக்கல் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் வழங்கியுள்ளது.

  காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தர் 151-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 2015-ம் ஆண்டு விவேகானந்தர் நாள்காட்டி வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

  விழாவில் சிதம்பரம் நகரில் 29 ஆண்டுகளாக கல்விச் சேவையும், விவேகானந்தர் கருத்துகளையும், போதனைகளையும், தத்துவங்களையும் மாணவர்களிடையே புகுத்தி வரும் காமராஜ் பள்ளிக்கு சுவாமி விவேகானந்தர் விருதை அப்பள்ளி தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தனிடம் நாமக்கல் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமத் தலைவர் ஸ்ரீமத்சுவாமி பூர்ணசேவானந்தர் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

  விழாவில் பள்ளி முதல்வர் ஜி.சக்தி, துணை முதல்வர் ஜி.ஷீலா, நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், விவேகானந்தர் பேரவைத் தலைவர் டி.பாலு, பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பேராசிரியர்கள் வி.திருவள்ளுவன், டி.அரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நாமக்கல் விவேகானந்தர் பேரவைச் செயலாளர் பி.பரணிதரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai