Enable Javscript for better performance
கீழ்வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கீழ்வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு

    By கடலூர்,  |   Published on : 26th December 2014 02:44 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்டதன் நினைவு தினம் கடலூரில் அனுசரிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூரில் அம்பேத்கர் சிலை அருகே வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட துணைச் செயலர்கள் திருமார்பன், நகரச் செயலர் பாவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் கீழ்வெண்மணி நினைவு தினம் மற்றும் அம்பேத்கர் நினைவு தின பொதுக்கூட்டம் கடலூர் வண்டிப்பாளையத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.எஸ். செங்கல்ராவ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் எம். பழனிவேல், எம்.ராதா, நா.வெற்றிவேல், பொருளர்கள் டி. ராமு, ஏ.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ரங்கன்பிரகாஷ் உரையாற்றினார். மாநில மாணவரணித் தலைவர் பி.எம்.குமார், விவசாய அணித் தலைவர் ஜி. ராமமூர்த்தி, மருத்துவர் அணித் தலைவர் கே.மதியழகன், புதுவை மாநிலத் தலைவர் கே.என். கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai