சுடச்சுட

  

  சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட வேன் பிடிபட்டது

  By கடலூர்,  |   Published on : 26th December 2014 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னையில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற டெம்போ வேன் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வியாழக்கிழமை பிடிபட்டது.

  கேரள மாநிலத்தைச் சேர்ந்த வி.ரிஷித் (17), யே.கோட்சன் (21), ஜ.அல்தாத் (18) ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து ஒரு டெம்போ வேனில் கேரளத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். வேன் கடலூர் மாவட்டம், ராமநத்தம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்றபோது திடீரென பழுதானது.

  அப்போது, அங்கிருந்த மெக்கானிக்கிடம் வாகனத்தை பழுது பார்த்தனர். இவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த மெக்கானிக் இதுகுறித்து ராமநத்தம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.

  அதன்பேரில், காவல் ஆய்வாளர் சீனுபாபு, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், வேன் சென்னையில் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வேனை பறிமுதல் செய்த போலீஸார் இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

  போலீஸாரின் விசாரணையில் திருவல்லிக்கேணி வெங்கடாசலம் நாயக்கர் தெருவைச் சேர்ந்த ப.முத்துக்குமரன் (39) என்பவரது வாகனம் என்பதும், சென்னையில் திருட்டு போனது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

  இதையடுத்து ராமநத்தம் வந்திருந்த திருவல்லிக்கேணி போலீஸாரிடம் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai