சுடச்சுட

    

    திட்டக்குடி கோயில் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற த.வா.க. கோரிக்கை

    By கடலூர்,  |   Published on : 26th December 2014 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குளம் ஆக்கிரமிப்பு மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    திட்டக்குடியில் அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான திருக்குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

    இதுதொடர்பாக, அண்மையில் கோயிலுக்கு வந்த இந்து அறநிலைத் துறை ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அப்போது, திருக்குளத்தை பார்வையிட்ட ஆணையர் தனபால், ஒரு வாரத்துக்குள் குளத்தை முழு அளவீடு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் முருகன், கோயில் திருக்குளத்தை அளவீடு செய்ய வட்டாட்சியரிடம் முறைப்படி மனு அளித்தார். எனினும், இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிகிறது.

    எனவே, திருக்குள ஆக்கிரமிப்பு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மங்களூர் ஒன்றியச் செயலாளர் ரெங்க சுரேந்தர் வட்டாட்சியர் தேவநாதனிடம் மனு அளித்தார்.

    அப்போது, அக்கட்சியின் நகரத் தலைவர் உ.முருகன், ஒன்றியத் தலைவர் முருகன், துணைத் தலைவர் யுவராஜா, பொருளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லையெனில் ஜன.5ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai