சுடச்சுட

  

  கடலூரில் அரசுப் பள்ளியை மத்திய சிறைவாசிகள் வியாழக்கிழமை சுத்தம் செய்தனர்.

  கடலூர் மத்திய சிறையில் சுமார் 700 பேர் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இதில், நன்னடத்தை கைதிகளை தேர்வு செய்து "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணியில் சிறைக் கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் ஈடுபடுத்தி வருகிறார்.

  அதன்படி, கடந்த 3 வாரங்களாக மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை சிறைவாசிகள் சுத்தம்

  செய்தனர்.

  இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை கடலூர் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் 50 சிறைவாசிகள் ஈடுபட்டனர். இப்பணியை சிறைக் கண்காணிப்பாளர் ஆ.முருகேசன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

  பள்ளி வளாகத்தில் கிடந்த குப்பையை அகற்றியும், மரங்களின் கிளைகளை வெட்டியும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai