சுடச்சுட

    

    விருத்தாசலம் போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விருத்தாசலம் பணிமனை 2-ல், பேருந்துகளுக்கான விருத்தாசலம் தகுதிச் சான்று பிரிவு மற்றும் கடலூர் தகுதிச் சான்று பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில், டிசம்பர் 22-ம் தேதி ஜாக்கி மூலம் பேருந்து தூக்கப்பட்டு அதன்கீழ் புதுச்சேரி முத்தையால்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பணி செய்துகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பேருந்து, சுப்பிரமணியன் பணி செய்து கொண்டிருந்த பேருந்து மீது இடித்ததில், ஜாக்கி மீது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து நகர்ந்துள்ளது. இதனால், பேருந்துக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த சுப்பிரமணியன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது, சென்னை அப்பலோ மருத்துவமனையில் சுப்பிரமணியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், விபத்துக்குக் காரணமான மற்றொரு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கணபதி மீது விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai