சுடச்சுட

    

    பண்ருட்டி வட்டம் அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம் தலைமை வகித்து மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் தேன்மொழி, ஊராட்சி துணைத் தலைவர் ஜெயபாரதி, ஊராட்சி செயலர் ஆரோக்கியராஜ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    கடலூர் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு முகமை சார்பில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மா, தேக்கு, மலைவேம்பு, இலுப்பை மற்றும் நாவல் உள்ளிட்ட சுமார்

    2 ஆயிரம் மரக்கன்றுகள் நட வழங்கப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai