சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

  கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் குடில்களை அமைத்தும், ஸ்டார்களை தொங்க விட்டும் அலங்கரித்திருந்தனர். புத்தாடை அணிந்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும், வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

  கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் பங்குதந்தை அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது. வானதூதர் பாடிய பாடல்கள் இசைக்க பங்குதந்தை குழந்தை யேசுவின் சொரூபத்தை குடிலில் வைத்து பிரார்த்தனை செய்தார். அருட்தந்தையர் லூர்துசாமி, ஆரோக்கியசாமி கலந்து கொண்டனர்.

  கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. உதவி பங்குதந்தை ஜோசப் சகாயராஜ் அடிகளார், அருட்தந்தை ஜான் அடிகளார் ஆகியோர் பங்கேற்றனர்.

  கடலூர் கிளைச் சிறையில் உள்ள தூய எபிபெனி ஆலயத்தில் பங்குதந்தை அருண்ஜெபஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

  சாமிபிள்ளை நகரில் புனித சகாய அன்னை ஆலயம், ஆற்காடு லூத்ரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம், சொரக்கல்பட்டு ஏழாம் நாள் அட்வண்டிஸ்ட் திருச்சபை, செயின்ட் ஜான்ஸ் சர்ச், அந்தோனியார் ஆலயம், முதுநகர் புனித சவேரியார் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

  கடலூர் புனித வளனார் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, ஹெல்பேஜ் இந்தியா முதியோர் இல்லத்தில் நடந்தது. பேராசிரியர் கிறிஸ்டி பெர்னார்டு தலைமை வகித்தார். திமுக மாணவரணிச் செயலாளர் இள.புகழேந்தி முதியோருக்கு நல உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். ஊராட்சிமன்றத் தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.

  கடலூர் பத்திரிகையாளர் மன்றத்தில் புதன்கிழமை மாலையில் நடந்த விழாவில் எபிபெனி ஆலய பங்குதந்தை அருண்ஜெபஸ் ஆல்பர்ட், காவல் துணைக் கண்காணிப்பாளர் மு.ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.கதிரவன், குழந்தைகள் நல பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதேபோன்று மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai