சுடச்சுட

    

    கடலூரில் பெண் மீன் வியாபாரிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர், புதுநகர், தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மீன் வியாபாரம் செய்யும் பெண்களிடம் ஒழுங்கைக் கடைபிடிக்கும் விதமாக தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் இலவசமாக சீருடை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, முதுநகர் மீன் சந்தையில் 240 பேருக்கும், புதுநகர் மீன் சந்தையில் 130 பேருக்கும், தேவனாம்பட்டினத்தில் 38 பேருக்கும் 3 செட் உடைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கிஞ்சம்பேட்டை மீன் சந்தையில் உள்ள 55 பெண்களுக்கு புதன்கிழமை இலவச சீருடை வழங்கப்பட்டது.

    இதற்கான நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எஸ்.கெஜேந்திரன் பங்கேற்று சீருடைகள் வழங்கினார்.

    இதில், மாவட்டச் செயலர் வி.சிவக்குமார், இணைச் செயலர் ஆர்.கல்யாணசுந்தரம், இளைஞர் பேரவைச் செயலர் ஐ.மாணிக்கம், ஒன்றியச் செயலர் டி.செல்வம், கிராமத் தலைவர் எம்.கெங்காதுரை பங்கேற்றனர்.

    அடுத்த கட்டமாக மஞ்சக்குப்பம் அண்ணா சந்தையைச் சேர்ந்த மீன் வியாபாரிகளுக்கு சீருடை வழங்கப்பட உள்ளதாக பேரவைத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai