சுடச்சுட

  

  தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பயிற்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 270 பேருக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

  மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான பயிற்சி நிறுவனம் பிஎம்எஸ்எஸ்எஸ் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது.

  இதன்படி, இம் மாவட்டத்தைச் சேர்ந்த 270 பேருக்கு அழகுகலைப் பயிற்சி, கணினி தொடர்பான பயிற்சி, ஏசி உள்ளிட்ட மின்சாதனங்கள், செல்போன் பழுதுநீக்குதல் பயிற்சி, வேலைப்பாடுடன் கூடிய தங்க நகை செய்யும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் முதுநகரில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

  ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜி.யு.கே.ராவ் தலைமை வகித்து பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். திட்ட இயக்குநர் ஜெ.கோட்டீஸ்வரராவ் பயிற்சி நிறுவனத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

  முன்னதாக, பயிற்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருள்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் வ. ஆல்பர்ட் தம்பிதுரை வரவேற்றார். பொதுமேலாளர் ம.ரோக்புஷ்பராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai