Enable Javscript for better performance
3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மாணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மாணவர் கைது

    By பண்ருட்டி,  |   Published on : 26th December 2014 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி அருகே 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பத்தாம் வகுப்பு மாணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பண்ருட்டி வட்டம், நடுக்காட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமியை புதன்கிழமை மாலை காணாது, அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.

    அங்குள்ள முந்திரிக் காடு அருகே தேடிச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது, பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஓடியதைக் கண்டு, சிறுமியின் தாய் அப்பகுதியில் தேடினார்.

    அப்போது, அங்கு மயங்கிக் கிடந்த சிறுமியை தூக்கி வந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர், மேல்சிகிச்சை அளிக்கவும், பரிசோதனை மேற்கொள்ளவும் அந்தச் சிறுமி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தச் சிறுவனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai