சுடச்சுட

  

  பால், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள மாநில அரசைக் கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் கிடப்பிலுள்ள திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொகுதி வாரியாக பாமகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  கடலூர் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, சுகாதாரம், தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், மத்திய, மாநில நெடுஞ்சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும், கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து சிறந்த சிகிச்சையளிக்க வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த கொள்முதல் விலையை வழங்கக் கோரியும் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே கிழக்கு மாவட்ட பாமக சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

  மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வை.திருமூர்த்தி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழுத்தலைவர் இரா.கோவிந்தசாமி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

  கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் லாரன்ஸ் சாலையில் கிடப்பிலுள்ள ரயில்வே சுரங்கப்பாதைப் பணியை உடனடியாக முடிக்க வேண்டும், கெடிலம் ஆற்றுப்படுகையில் இறைச்சி, தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர்கள் ப.சண்முகம், பழ.தாமரைக்கண்ணன், துணைப் பொதுச்செயலர் அ.தர்மலிங்கம், ஒன்றியச் செயலர் ப.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பண்ருட்டி: இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மாநில துணைத் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் கணபதி, ராஜா, அரிராமன் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி நகர செயலர் நந்தகோபால் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலர் கோதண்டபாணி கண்டன உரையாற்றினார்.

  பால் விலை, மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் விரைந்து வழங்க வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

  விருத்தாசலம்: இதுபோல் விருத்தாசலத்திலும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் ரா.கோவிந்தசாமி தலைமை வகித்தார். நகர செயலர் ச.சிங்காரவேல் வரவேற்றார்.

  ஒன்றியச் செயலர்கள் வெங்கடேசன், ராஜவேல், குணசேகரன், மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai