சுடச்சுட

  

  அதிமுக அமைப்புத் தேர்தல் ஆலோசனை கூட்டம்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

  By சிதம்பரம்  |   Published on : 27th December 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைப்புத் தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தெற்குவீதியில் உள்ள தனியார் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் 3 பேர் பங்கேற்று உரையாற்றினர்.

  கூட்டத்துக்கு கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்.பி. தலைமை வகித்துப் பேசினார். சிதம்பரம் நகரச் செயலர் ரா.செந்தில்குமார் வரவேற்றார். மண்டல தேர்தல் பொறுப்பாளரும், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆர்.வைத்தியலிங்கம் பங்கேற்று தேர்தல் ஆணையாளர்களுக்கு, ஆவணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாற்று கட்சியினரிடம் விலை போகாதவர்களுக்கும், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். சாதி சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது. குறைந்தது கட்சியில் 5 ஆண்டுகள் உறுப்பினர்களாக உள்ளவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என தெரிவித்தார்.

  கடலூர் மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், தமிழக சமூகநலத் துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சருமான பா.வளர்மதி, தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் உரையாற்றினர். முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, சிதம்பரம் தொகுதி எம்.பி. மா.சந்திரகாசி, எம்எல்ஏக்கள் செல்வி ராமஜெயம் (புவனகிரி) நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), முன்னாள் மாவட்டச் செயலர் வி.கே.மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் உமாமகேஸ்வரன், முன்னாள் நகரச் செயலர்கள் தோப்பு கே.சுந்தர், கே.கலியபெருமாள், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், எம்.ஜி.பாரி மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பேரவைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai