சுடச்சுட

  

  அரசுப் பேருந்துகளை மறித்த நகராட்சி ஊழியர்கள்: பயணிகள் அவதி

  By பண்ருட்டி,  |   Published on : 27th December 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பேருந்து நிலைய நுழைவு வரி செலுத்தாத கும்பகோணம் டிப்போ அரசு பேருந்துகளை பண்ருட்டி நகராட்சி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மறித்தனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

  பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளிடம் இருந்து நுழைவு வரியாக ரூ.12 பண்ருட்டி நகராட்சியால் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கும்பகோணம் மற்றும் வேலூர் கோட்ட அரசுப் பேருந்துகள் நுழைவு கட்டணம் செலுத்துவது இல்லையாம்.

  இந்நிலையில், பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த கும்பகோணம் கோட்ட அரசுப் பேருந்துகளை, பண்ருட்டி நகராட்சி ஊழியர்கள் மறித்து வரி கேட்டனராம்.

  இதற்கு, எங்கள் அதிகாரிகள் நுழைவு வரி செலுத்தக் கூறவுமில்லை, அறிவிப்பு பலகையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் நுழைவு வரி செலுத்தினால் எங்கள் ஊதியத்தில் தான் பிடித்தம் செய்வர் எனவே செலுத்த முடியாது என வாதிட்டுள்ளனர்.

  இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பேருந்தை மறித்துள்ளனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர். அப்போது அவ்வழியே வந்த

  காவல் ஆய்வாளர் சமரசம் செய்து, பேருந்தை அனுப்பி வைத்தாராம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai