சுடச்சுட

    

    எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

    By கடலூர்,  |   Published on : 27th December 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின், கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.

    மாநில பொதுச்செயலர் சேரலாதன் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் தங்கமணி பேசினார்.

    கூட்டத்தில், எச்ஐவி தொற்றில்லாத, புறக்கணித்தல் இல்லாத, எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது. திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பொது சேமநல நிதி பிடித்தம் செய்தல் உள்ளிட்டவை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடலூர் மாவட்டத் தலைவராக செல்ல.சுப்பிரமணியன், செயலராக விஜயகுமார், பொருளராக ரமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai