சுடச்சுட

  

  ஓய்வூதியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

  By கடலூர்,  |   Published on : 27th December 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் நகராட்சி ஆணையரைக் கண்டித்து ஓய்வூதியர்கள் நடத்துவதாக அறிவித்திருந்த போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து கைவிடப்பட்டது.

  கடலூர் நகராட்சியில் 2013-14-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பணப்பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அளித்திருந்தது. எனினும், அதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் நகராட்சி ஆணையரைக் கண்டித்து தொடர் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு அதன்படி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

  இதையடுத்து கூட்டமைப்புத் தலைவர் ச.சிவராமன், செயலர் சி.ராமசாமி, நகராட்சித் தலைவர் ஆர்.குமரன், ஆணையாளர் ரா.முருகேசன், காவல்துறை உதவி ஆய்வாளர் மு.குமாரதேவன், கவுன்சிலர் கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்ற சமாதான பேச்சுவார்த்தை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

  இதில், ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பான மனுக்கள் பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை சரண்டர் தொடர்பான பணம், துப்புரவு பணியாளர்களுக்கு தையல் கூலியாக ஆண்களுக்கு ரூ.400, பெண்களுக்கு ரூ.40 உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஓய்வூதியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai