சுடச்சுட

  

  சிதம்பரத்தில் பாஜக சார்பில் பதினாறு கால் மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால.ரவி பாஜக கொடியேற்றி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் நகர துணைத் தலைவர் சிவநேசன், இளைரணி நிர்வாகி தினேஷ், மாணவரணி நிர்வாகி அருண்குமார், சிவக்குமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நன்றி அறிவிப்பு கூட்டம்: இதனிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு பாரத ரத்னா விருது கிடைத்தமைக்கு பாராட்டும், நன்றி அறிவிப்பு கூட்டமும் மாலைக்கட்டித் தெருவில் நடைபெற்றது. மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் பால.ரவி தலைமை வகித்தார். வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நகர துணைத் தலைவர் சின்ன கிருஷ்ணன் நன்றி தெரிவித்துப் பேசினார். நிகழ்ச்சியில் கிருத்திவாசன், நகர நிர்வாகி சிவனேசன், அருண்குமார், தினேஷ், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai