சுடச்சுட

  

  சிதம்பரம் 26-வது வார்டில் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) மற்றும் கட்டடப் பொறியாளர் சங்கம் இணைந்து 2100-வது மரக்கன்று நடும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

  விஹெச்பி மற்றும் கட்டடப் பொறியாளர் சங்கம் இணைந்து சுமார் 1 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து, பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

  விஹெச்பி நகரத் தலைவர் ஜி.தண்டபாணி மரக்கன்றை நட்டு, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பொறியாளர் மணி தலைமை வகித்தார்.

  பொறியாளர் கே.ராஜா பொதுமக்களிடம் மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். மந்தகரை பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் பொறியாளர் உமாசங்கர், சுரேஷ், புகழேந்தி, சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பஞ்ரங்தள் மாவட்டத் தலைவர் குருமூர்த்தி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai