சுடச்சுட

  

  விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  விருத்தாசலம் நகராட்சி சார்பில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தலைமை மருத்துவர் குலோத்துங்கச்சோழன் தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், கொசு ஒழிப்பு குறித்தும் உரையாற்றினார்.

  முகாமில், புறநகர் மருத்துவ அலுவலர் ரமா, அரசு மருத்துவ அலுவலர் வசந்த், கண்காணிப்பாளர் தமிழரசி, துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai