சுடச்சுட

  

  நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம்: இன்று கொடியேற்றம்

  By சிதம்பரம்  |   Published on : 27th December 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சுவாமியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாள்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலாவுடன் உற்சவம் நடைபெறுகிறது.

  தினமும் நடைபெறும் சாயரட்சை பூஜையில் சித்சபையில் மாணிக்கவாசகப் பெருமானை எழுந்தருளச்செய்து, திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.

  ஜனவரி 4-ஆம் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. ஜனவரி 5-ஆம் தேதி காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சித்சபையில் ரகசியபூஜை, பஞ்சமூர்த்தி வீதிஉலா, மார்கழி ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் ஆகியவை நடைபெறுகின்றன.

  ஜனவரி 6-ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலர் ஆர்.பாஸ்கர தீட்சிதர், துணைச் செயலர் என்.எஸ்.மணி தீட்சிதர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai