சுடச்சுட

    

    பண்ருட்டி கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை காடாம்புலியூர் போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

    கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக காடாம்புலியூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீஸார் மேல்மாம்பட்டு அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குருசாமி(39), வேல்முருகன்(36), காமராஜ்(27), ராமகிருஷ்ணன்(45) ஆகியோரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai