சுடச்சுட

    

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க, ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இடைத்தரகர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த வேங்கடபதி மனைவி வெண்ணிலா.

    வேங்கடபதி இறப்பைத் தொடர்ந்து அவரது மகனுக்கு வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக, வெண்ணிலா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது, வருவாய் ஆய்வாளர் மயில்வாணன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக வெண்ணிலா கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை கண்காணிப்பாளர் உதயசங்கர், ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் வழக்குப்பதிந்து ரசாயனம் தடவிய பணத்தை வெண்ணிலாவிடம் கொடுத்தனுப்பினர்.

    வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற வெண்ணிலா, வருவாய் ஆய்வாளரைச் சந்தித்து பணம் கொடுக்க முயற்சித்துள்ளார்.

    ஆனால், அவர் பணத்தை வாங்காமல் அலுவலகத்திலிருந்த ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்படி, வெண்ணிலா பணம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அந்த நபரை பிடித்தனர்.

    விசாரணையில், அவர் கல்குணம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி மகன் சிவச்சந்திரன் (29) என்பதும், இவர் வருவாய் ஆய்வாளருக்கு இடைத்தரகராக செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து

    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai