Enable Javscript for better performance
வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By விருத்தாசலம்  |   Published on : 27th December 2014 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், மணல் கொள்ளையால் சேதமடைந்த தேவங்குடி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். தேவங்குடி சாலையை சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெள்ளாறு மணல் கொள்ளையில் ரூ.150 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்துக்கு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ தலைமை வகித்தார்.

    வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத் தலைவர் பஞ்சமூர்த்தி, ராஜவன்னியன், சசிக்குமார், மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் புஷ்பதேவன், வெங்கடேசன், வீரகாந்தி உள்பட 300-க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai