சுடச்சுட

    

    கடலூர் ஊராட்சி ஒன்றியம், நல்லாத்தூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புத் திட்டங்களாக இலவச அரிசி வழங்குதல், இல்லத்தரசிகளுக்கு இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்குதல், படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதி வண்டி, கல்வி ஊக்கத் தொகை, அம்மா உணவகங்கள், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், கிராமப்புற மக்களுக்கு இலவச கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் வழங்குதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கோயில்களில் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, நல்லாத்தூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

    இதில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விளக்கிடும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

    இப்புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பாலாம்பிகை, முத்துக்குமாரசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai