சுடச்சுட

  

  கராத்தே மாஸ்டருக்கு கிராண்ட் மாஸ்டர் விருது

  By சிதம்பரம்,  |   Published on : 28th December 2014 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே வீரர் சென்சாய் வி.ரங்கநாதனுக்கு கிராண்ட் மாஸ்டர் விருது வழங்கப்பட்டது.

  கொஜிரியோ கராத்தே பெடரேஷன் சார்பில் 7-வது ஆசியா அளவிலான கராத்தே போட்டி கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் மலேசியா, சிங்கப்பூர், நேபாளம், இந்தோனிசியா, இலங்கை, வங்கதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் தமிழ்நாடு கொஜிரியோ கராத்தே பெடரேஷன் சார்பில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சென்சாய் வி.ரங்கநாதனுக்கு 5-ம் நிலை பிளாக் பெல்ட் மற்றும் கிராண்ட் மாஸ்டர் விருது வழங்கப்பட்டது.

  விருதினை ஏசியன் கொஜிரியோ கராத்தே சங்கத் தலைவர் அனந்தன் (மலேசியா), செயலர் லெனின் (மலேசியா), அகில இந்திய கொஜிரியோ கராத்தே சங்கத் தலைவர் லோகநாதன், தமிழ்நாடு மாநிலச் செயலர் ராஜா ஆகியோர் பங்கேற்று விருதினை வழங்கினர்.

  மேலும் இந்த போட்டியில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் பள்ளி மாணவி கிருஷ்ணபிரியா, நெய்வேலி பள்ளி மாணவன் செல்வவிநாயகம் ஆகியோர் இரண்டாம் பரிசும், அமராவதி மற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai