சுடச்சுட

  

  கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

  By கடலூர்,  |   Published on : 28th December 2014 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடப்பாண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஈஐடி பாரி ஆலை கிளைக் கூட்டம் நெல்லிக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தலைவர் ஆர்.தென்னரசு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் டி.ரவீந்திரன், மாவட்டத் தலைவர் கோ.மாதவன், மாநில செயலர் எஸ்.காமராஜ், பொருளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆலை செயலர் டி.தேவநாதன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

  கூட்டத்தில் 2013-14-ஆம் ஆண்டு கரும்பு பருவத்துக்கு தமிழக அரசு அறிவித்த விலை அடிப்படையில் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.47 கோடி பாக்கியை வழங்க வேண்டும். 2014-15-ஆம் ஆண்டு கரும்பு பருவத்துக்கு தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, விலையை அறிவிக்க வேண்டும். கரும்பு இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட ரூ.2,250 என்ற விலையை ஏற்க மாட்டோம். வண்டி வாடகை முழுவதையும் ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

  இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதி ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும், அதனை விளக்கி பிரசாரங்கள் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

  முன்னதாக, கோட்டத்தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துணைத் தலைவர்கள் எம்.மணி, ஆதவன், செயலர்கள் ஆர்.கே.சரவணன், ஜெயபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai