சுடச்சுட

  

  காமராஜர் சிலை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் காங்கிரஸ் மனு

  By பண்ருட்டி  |   Published on : 28th December 2014 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி பேருந்து நிலைய முகப்பில் உள்ள காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

  பண்ருட்டி பேருந்து நிலைய முகப்பில் காமராஜரின் வெண்கலச் சிலை மணி மண்டபத்துடன் உள்ளது. இதனை 1982-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த சந்திரசேகர் திறந்து வைத்தார்.

  தற்போது இந்தச் சிலை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாகவும், இதனால் இந்தச் சிலையை மணி மண்டபத்துடன் மேற்குப் பகுதிக்கு மாற்றம் செய்வது என திங்கள்கிழமை நடந்த பண்ருட்டி நகர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து, நகர காங்கிரஸ் கமிட்டியின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. பின்னர் நகர காங்கிரஸ் தலைவர் ஏ.கே.மணி தலைமையில், பொதுச் செயலர் நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் சபியுல்லா, மாவட்ட பொதுச் செயலர் முகபுக்கான், நெல்லிக்குப்பம் நகரத் தலைவர் திலகர், கடலூர் மாவட்ட துணைத் தலைவர் முருகன், செயற்குழு ராஜ்குமார், கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

  மனுவில், தற்போது காமராஜர் சிலை உள்ள இடம், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் 40 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

  எனவே பண்ருட்டி நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதற்கு திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai