சுடச்சுட

  

  சிறுதானியங்கள் சிறந்த மருந்தாகும்: ஆட்சியர்

  By பண்ருட்டி  |   Published on : 28th December 2014 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறுதானிய உணவு வகைகளை உட்கொண்டால் உடல் நலம், ஆரோக்கியம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறினார்.

  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திடடப் பணிகள் மூலம் பண்ருட்டியில் பாரம்பரிய உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

  மாவட்ட திட்ட அலுவலர் கோ.அன்பழகி வரவேற்றார். வட்டாட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் பா. ரேணுகாம்பாள், உதவி சித்த மருத்துவ அலுவலர் (பண்ருட்டி) சந்திரசேகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

  அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு வகைகளை பார்வையிட்ட பின்னர் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது: பல நாடுகளில் உணவு பசிக்காகவும், ருசிக்காகவும் சாப்பிடப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உணவு என்பது மருந்தாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நாம் வசிக்கும் பகுதி வெப்ப மண்டல பகுதி என்பதால் மருத்துவ குணமும், உடல் ஆரோக்கியத்தையும் காக்கும் சிறுதானிய பயிர்கள் வளர்வதற்கான தன்மையை பெற்றுள்ளது.

  அங்கன்வாடி பணியாளர்கள் சிறுதானிய உணவுகளின் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  பரிசளிப்பு: சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் சமையல் போட்டி, ஆரோக்கிய குழந்தை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே பாரம்பரிய உணவு குறித்த கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ்கள் வழங்கினார். பாரம்பரிய உணவு வகைகளுக்கான செயல்முறை விளக்க கையேட்டை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் பெற்றுக்கொண்டார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.செல்வி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai