Enable Javscript for better performance
ஜன.1-ல் மஞ்சக்குப்பம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி- Dinamani

சுடச்சுட

    

    ஜன.1-ல் மஞ்சக்குப்பம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி

    By கடலூர்,  |   Published on : 28th December 2014 02:45 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகரில் பெருந்தேவி தாயார் உடனுறை ஆட்கொண்ட வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 17 ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 1-ம் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    மறுநாள் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பட்சிராஜன் கருடன் மீது பெருமாள் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். தொடர்ந்து சிறப்புப் பூஜைகளுக்கு பின்னர் சுவாமி வீதியுலா புறப்பாடும் நடைபெகிறது என கோயில் நிர்வாக அறங்காவலர் சா.நடராஜன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai