சுடச்சுட

    

    தில்லை திருக்குறள் பேரவை செயற்குழுக் கூட்டம்

    By சிதம்பரம்,  |   Published on : 28th December 2014 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரத்தில் தில்லை திருக்குறள் பேரவை செயற்குழுக் கூட்டம் சிவஜோதி நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

    நிறுவனத் தலைவர் க. அழகிய மணவாளன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், பாபு, அன்புசெழியன், திருஞானசம்பந்தன், சிவபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் பி.சிவக்குமார் நன்றி கூறினார்.

    பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தினத்தன்று புவனகிரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பது, காணும் பொங்கல் அன்று திருக்குறள், திருவள்ளுவரை போற்றும் விதமாக வாழ்த்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது, பள்ளி மாணவர்களிடையே மனப்பாடம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai