சுடச்சுட

  

  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு குறித்து, கடலூர் மாவட்டம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 13, 14-ம் தேதிகளில் கடலூரில் நடக்கிறது. அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு கூட்டம் கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.மருதவாணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எஸ்.ரெங்கசாமி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து பேசினார். மாநில துணைத்தலைவர் சி.ராமநாதன், மாவட்டத்தலைவர் சி.மச்சேந்திரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

  கூட்டத்தில், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணி ஓய்வு ஒட்டுமொத்த தொகை உயர்த்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நடைபெற உள்ள மாநாடு குறித்த மாவட்டம் முழுவதிலும் பிரசார இயக்கம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

  கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள்

  கே.ராஜேந்திரன், ஏ.அன்பழகன், ஆர்.கருணாகரன், ஜெ.பானுமதி மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai