சுடச்சுட

  

  கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

  இக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ந.கண்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் க. மனோகரன், தாவரவியல் துறைத் தலைவர் ச.கீதாதேவி, ஆங்கிலத் துறைத் தலைவர் ரா.ரவி, கணினி அறிவியல் துறைத் தலைவர் கா.கீதா ஆகியோர் பேசினர்.

  முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் சுனாமி தொடர்பான பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் ச. உமாமகேஸ்வரி, ப.பாண்டித்துரை, கட்டுரைப் போட்டியில் த. சந்தியா, பு.கெளதமன், ஓவியப் போட்டியில் ச. சம்பத்குமார், சே. அறிவுடைநம்பி ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசு வழங்கினார்.

  கருத்தரங்கில் தமிழ்த் துறைத் தலைவர் சு. தமிழாழிக்கொற்கைவேந்தன் வரவேற்றுப் பேச, கணிதத் துறைத் தலைவர் சி.சிவசண்முகராஜா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai