சுடச்சுட

    

    "மின் விபத்துகளைத் தவிர்க்க கூடுதல் கவனம் தேவை'

    By கடலூர்  |   Published on : 28th December 2014 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மின்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடலூர் கோட்ட செயற்பொறியாளர் க.காமராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பொதுமக்கள் தங்களது மின் இணைப்புக்கான சர்வீஸ் வயர்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளதா என ஊர்ஜிதம் செய்து கொள்ளவேண்டும். பழைய மின் இணைப்புகளின் சர்வீஸ் வயர்களை பாதுகாப்பு கருதியும், மின் விபத்தினால் உயிரிழப்புகளைத் தவிர்த்திடவும் உடனடியாக பழைய வயர்களை மாற்ற வேண்டும்.

    சர்வீஸ் வயர்கள் தொங்கிய நிலையில் உள்ளவைகளை உடன் அவரவர் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து சரிசெய்யலாம். மின் அளவி பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பு பலகை உள்ள இடம் சுத்தமாகவும், எளிதில் அணுகி செல்லக் கூடியதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். மின் நுகர்வோர்கள் மின் இணைப்பிலிருந்து பாதுகாப்பற்ற முறையிலோ, விதிமுறைகளுக்கு புறம்பாகவோ மின் நீட்டிப்பு செய்யதல் கூடாது. மின்சார கம்பிகளிலிருந்து குறைந்தபட்சம் 4 அடி பக்கவாட்டில் இடைவெளி விட்டு

    மட்டுமே வீடுகள் கட்ட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai