சுடச்சுட

  

  முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

  By கடலூர்,  |   Published on : 28th December 2014 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் வென்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் 2014-15-ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடந்தன.

  இதில், 100, 400, 3,000 மீட்டர் ஓட்டப்போட்டிகளும், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், கூடைப்பந்து, டென்னிஸ், மேசைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கபடி, கையுந்துபந்து, வளைகோல்பந்து போட்டிகளும், 50, 100, 200, 400 மீட்டர் ப்ரி ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்பிளை ஸ்ட்ரோக் ஆகிய பிரிவுகளில் நீச்சல் போட்டிகளும் நடத்தப்பட்டன.

  போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோ.நந்தகுமார் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றோருக்கு முறையே ரூ.1,000, ரூ.750, ரூ.500 பரிசுத்தொகையாக வழங்கினார். இதில் பல்வேறு பிரிவுகளில் தலா 204 பேருக்கு பரிசுத்தொகையாக ரூ.4.59 லட்சம் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் அன்பு, அப்பாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சியாளர் ஆர்.ஜெயகுமாரி நன்றி கூறினார். போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai