சுடச்சுட

  

  அரசிடம் இருந்து கோயில்களை மீட்க போராட்டம் நடத்தப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் குமரன்ஜி தெரிவித்தார்.

  விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் ஜி.தண்டபாணி வரவேற்றார்.

  கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் குமரன்ஜி பேசியது: இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து தேசத்தை கௌரவிக்க வேண்டும். இந்து அறநிலையத் துறையில் உள்ள கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக மீட்டும் கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை எனில் கோயில்களை மீட்க மாபெரும் போராட்டத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் என்றார்.

  கூட்டத்தில் பாஜக விவசாய அணி நிர்வாகி பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெயகோபால், சரவணப்பெருமாள், சுரேஷ், பாலரவி, பார்த்தீபன், சுமோசக்தி, பாண்டியன், குமாரசாமி தீட்சிதர், கோவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பஜ்ரங்தள் மாவட்டத் தலைவர் ஜி.குருமூர்த்தி நன்றி கூறினார். நகரில் மரக்கன்றுகளை நட்டு வரும் சமூக ஆர்வலர் கே.ராஜாவுக்கு பசுமை பிரம்மா என்ற பட்டம் வழங்கப்பட்டது.

  மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். சிதம்பரம் நகரில் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai