சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (டிசம்பர் 29) பேருந்துகள் வழக்கம்போல, இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 22 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (டிசம்பர் 29) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். எனினும், ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

  இதுகுறித்து, ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (டிசம்பர் 29) வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும்.

  பொதுமக்களின் நலன் கருதி போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும். தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai